கொட்டாஞ்சேனை பகுதியில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றின் மீது துப்பாக்கிபிரயேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் 13, 2025 - 11:28
கொட்டாஞ்சேனை பகுதியில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு!

கொழும்பு- கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றின் மீது துப்பாக்கிபிரயேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12.35 அளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வாகனமொன்றை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து,  மட்டக்குளி பிரதேசத்தில் பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளனர்.

எனினும், சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். தொடர்ந்து கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

எனினும், சந்தேகநபர் வாகனத்​தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!