ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பொலிஸார் ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறும், கடுமையான அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

செப்டெம்பர் 11, 2024 - 14:42
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பொலிஸார் ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறும், கடுமையான அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

முக்கிய வேட்பாளர்கள் கூடும் இடங்களில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், வேட்பாளர்கள் மேடைக்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் ஆதரவாளர்களால் பாதுகாப்பின்மை நிலவுவது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இருளான இடங்களில் கூட்டங்களை நடத்துவதன் மூலம் பாதுகாப்பு தரப்பினர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கையை நாளாந்தம் பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!