உக்கிய மின்சார கம்பங்களால் அச்சத்தில் தோட்ட மக்கள்

உக்கிய நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தருமாறு இத்தோட்ட மக்கள், மஸ்கெலியா மின்சார சபை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுகின்றனர்.

ஒக்டோபர் 12, 2022 - 20:11
உக்கிய மின்சார கம்பங்களால் அச்சத்தில் தோட்ட மக்கள்

150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பொகவந்தலாவை - கியூ தோட்ட மக்களின் பயன்பாட்டுக்காக 20 வருடங்களுக்கு முன்பு நாட்டப்பட்ட, 25க்கும் மேற்பட்ட  மர தூண்கள், உக்க நிலையில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மழைக்காலங்களில் இத்தோட்ட மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்றுவதற்காக மின்சார சபையால், கொங்கிரிட் தூண்கள் கொண்டுவரப்பட்டு, பழுதடைந்த தூண்களுக்குப் பக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு மின்சார சபை ஊழியர்களால் நாட்டப்பட்ட போதிலும் இதுவரை பழுதடைந்த தூண்களில் இருந்து மின் கம்பிகள் கொங்கிரீட் தூண்களுக்கு மாற்றப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறன.

எனவே, உக்கிய நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தருமாறு இத்தோட்ட மக்கள், மஸ்கெலியா மின்சார சபை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!