பாம்பை வைத்து தயாரிக்கப்பட்ட Pizza... அச்சத்தில் பொதுமக்கள்!
ஹாங்காங்கில் உள்ள Pizza தயாரிக்கும் பிரபல உணவகம் ஆனது வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் பாம்பு பீட்சாவை உருவாக்கியுள்ளது.

ஹாங்காங்கில் உள்ள Pizza தயாரிக்கும் பிரபல உணவகம் ஆனது வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் பாம்பு பீட்சாவை உருவாக்கியுள்ளது.
ஹாங்காங், தெற்கு சீனா மற்றும் வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் பீட்சா பிரபலமான உணவாகும். இங்கு தான் பாம்பு பீட்சாவும் அறிமுகப்படுத்தப்பட்டு இருகின்றது.
இது துண்டாக்கப்பட்ட பாம்பு இறைச்சி, கருப்பு காளான்கள் மற்றும் சீன உலர்ந்த ஹாம்கள் ஆகியவற்றை வைத்து இந்த பீட்சா தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாம்பு பீட்சாவானது அபலோன் சாஸுடன் கூடிய 9 அங்குல பீட்சா ஆகும். இது நவம்பர் 22 வரை விற்பனைக்கு இருக்கும்.
பல நாடுகளில் பீட்சாவின் மீது பல பொருட்களை வைத்து பரிமாறுவது வழக்கம். ஆனால் பல ஆசிய நாடுகளில் நீண்ட காலமாக பாம்புகள், ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கூறி, இதை பயன்படுத்துகிறார்கள்.