கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள்; ஒரு ஆண்டில் 35,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிபெயர்வு
கனடாவின் டொராண்டோ பெருநகரப் பகுதியில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 35,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடாவின் டொராண்டோ பெருநகரப் பகுதியில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 35,000-க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
2024 முதல் காலாண்டு முதல் 2025 முதல் காலாண்டு வரை, டொராண்டோ பெரும் பகுதியில் இருந்து மொத்தம் 2.5 இலட்சம் குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 68,173 குடும்பங்களில் 51.5% — அதாவது சுமார் 35,140 குடும்பங்கள் — முழுமையாக டொராண்டோவை விட்டு கனடாவின் பிற மாகாணங்களுக்கு மாற்றம் செய்துள்ளனர்.
உயர்ந்த வாழ்வு செலவுகள், குறிப்பாக வீட்டு வாடகை மற்றும் அன்றாடச் செலவின் அதிகரிப்பு காரணமாக, பலர் நகரப்பகுதிகளை விட்டு கிராமப்புறங்கள் மற்றும் குறைந்த செலவுள்ள பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.