நாளை முதல் இணையவழி கடவுச்சீட்டு முறை: பிரதேச செயலகங்களின் பட்டியல் இதோ!

நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலாளர்கள் கைரேகை பதிவுக்காக பயன்படுத்தப்படவுள்ள நிலையில் கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (15) ஆரம்பமாகவுள்ளது.

ஜுன் 14, 2023 - 22:28
ஜுன் 14, 2023 - 22:29
நாளை முதல் இணையவழி கடவுச்சீட்டு முறை: பிரதேச செயலகங்களின் பட்டியல் இதோ!

இணையவழி கடவுச்சீட்டு முறை

நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலாளர்கள் கைரேகை பதிவுக்காக பயன்படுத்தப்படவுள்ள நிலையில் கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (15) ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இணையத்தளத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்தார்.

இலங்கையில் பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இணைய கடவுச்சீட்டு விண்ணப்ப முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய செயல்முறையானது பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையை ஒழுங்குபடுத்துவதையும், கூரியர் சேவை மூலம் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களின் குடியிருப்புகளுக்கு பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, 'பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, வழங்கப்பட்ட தகவலைச் சரிபார்த்து, விண்ணப்பதாரர்கள் தேவையான விண்ணப்பப் படிவத்தைப் பெறுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் கொழும்புக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் வசதியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்துகிறது.

திணைக்களம் அதன் அலுவலகங்களில் கையளிக்கப்படும் விண்ணப்பங்களை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, இணையத்தள விண்ணப்பதாரர்கள் 51 பிரதேச செயலகங்களில் உள்ள ஆட்கள் பதிவு திணைக்களத்தின் உப அலுவலகங்களில் கைரேகை அடையாளங்களை சமர்ப்பிக்க முடியும்.

பிரதேச செயலகங்கள் விவரம்

அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை, பொத்துவில்

அனுராதபுரம் மாவட்டம் - நுவரகம் பலத்த மத்திய, கெக்கிராவ, ஹொரவ்பொத்தானை

பதுளை மாவட்டம் - மஹியங்கனை, ஹப்புத்தளை

மட்டக்களப்பு மாவட்டம் – வாழச்சேனை, காத்தான்குடி

கொழும்பு மாவட்டம் - சீதாவக, ஹோமாகம

காலி மாவட்டம் – கரந்தெனிய, அக்மீமன, நெலுவ

கம்பஹா மாவட்டம் - நீர்கொழும்பு, மீரிகம, கம்பஹா

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்காலை, திஸ்ஸமஹாராம

யாழ்ப்பாண மாவட்டம் – சாவகச்சேரி, பருத்தித்துறை

களுத்துறை மாவட்டம் – இங்கிரிய, மத்துகம, பாணந்துறை

கண்டி மாவட்டம் - கம்பளை, குண்டசாலை, புஜாபிட்டிய

கேகாலை மாவட்டம் - கலிகமுவ, ருவன்வெல்ல

கிளிநொச்சி மாவட்டம் – கரைச்சி

குருநாகல் மாவட்டம் – குளியாப்பிட்டிய, நிக்கவெரட்டிய, ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேற்கு மாகாண அலுவலகம்.

மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு

மாத்தளை மாவட்டம் - நாவுல

மாத்தறை மாவட்டம் - அத்துரலிய, தெவிநுவர

மொனராகலை மாவட்டம் – புத்தல

முல்லைத்தீவு மாவட்டம் – முல்லைத்தீவு

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, வலப்பனை

பொலன்னறுவை மாவட்டம் – எலெஹெர, திம்புலாகல, ஹிங்குராக்கொட

புத்தளம் மாவட்டம் – புத்தளம், சிலாபம்

இரத்தினபுரி மாவட்டம் – பலாங்கொட, குருவிட்ட, எம்பிலிபிட்டிய

திருகோணமலை மாவட்டம் – கிண்ணியா

வவுனியா மாவட்டம் – வெங்கலச்செட்டிகுளம்

- (News21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!