மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு
காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் கால்வாயை அண்மித்த வயல் பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹின்துருவ பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் கால்வாயை அண்மித்த வயல் பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று (02) காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் அத்துவெல்ல வாய்க்காலை அண்மித்த கால்வாயில் படகில் சென்று கொண்டிருந்தபோது, முகத்துவாரத்திற்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சடலம் காணாமல் போனவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.
உயிரிழந்தவர் 69 வயதுடைய மஹின்துருவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.