யாழில் தெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்ப தலைவர் உயிரிழப்பு
பெப்ரவரி 16ஆம் திகதி குறித்த நபரை தெரு நாய் கடித்துள்ளது. அவர் மறுநாள் காலை பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பில் குடும்ப தலைவர் ஒருவர் தெரு நாய் கடிக்குள்ளாகி நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கனகலிங்கம் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெப்ரவரி 16ஆம் திகதி குறித்த நபரை தெரு நாய் கடித்துள்ளது. அவர் மறுநாள் காலை பண்டத்தரிப்பு பிரதேச மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.
அவருக்கு மருத்துவரின் ஆலோசனையில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மணிநேரங்களில் உயிரிழந்துள்ளார் என்று மரண விசாரணையில் தெரிவிக்கப்படடுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர்
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.