யாழில் ஒருவர் அடித்துக்கொலை: மேலும் இருவர் கைது

சுன்னாக காதல் விவகாரத்தில் 54 வயதான நபரை அடித்துக் கொலை செய்தமை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 9, 2023 - 15:55
யாழில் ஒருவர் அடித்துக்கொலை: மேலும் இருவர் கைது

சுன்னாக காதல் விவகாரத்தில் 54 வயதான நபரை அடித்துக் கொலை செய்தமை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 வயது யுவதியும் 54 வயது ஆணொருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்று குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களை சேர்த்து வைப்பதாக உறவினர்கள்   ஊருக்கு வரவழைத்தனர்.

இதனையடுத்து, உறவினர்களால் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தியயதில் காயமடைந்த ஆண், வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சுன்னாகம் பொலிஸாரால் அறுவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தாக்குதலுக்கு உள்ளான யுவதி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யுவதியின் தந்தை  கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடயச் சான்றான, உயிரிழந்த நபரின் சாரத்தை எரித்த குற்றச்சாட்டில் யுவதியின் அண்ணனை   பொலிஸார் நேற்று (08) கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தினை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான்  செவ்வாய்க்கிழமை (08)  மாலை 4 மணியளவில் பார்வையிட்டார். 

அதன்பின்னர் உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!