ஒலிம்பிக் 2024: பதக்கப் பட்டியல் நிலவரம்; முன்னிலையில் ஆஸ்திரேலியா!
ஒலிம்பிக் 2024:சீனா இரண்டாம் இடத்திலும் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

ஒலிம்பிக் 2024 போட்டிகளின் பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா 3 தங்கம் வென்று மொத்தம் 5 பதக்கங்களுடன் முன்னிலையில் உள்ளது.
சீனா இரண்டாம் இடத்திலும் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
நீச்சலில் பெண்கள் 400 மீட்டர் எதேச்சை பாணி போட்டியில் ஆஸ்திரேலியாவின் Ariarne Titmus தங்கம் வென்றார்.
சுமார் 1 விநாடி கழித்து வந்த கனடா வீரர் வெள்ளி பதக்கம் வென்றதுடன், அமெரிக்காவிற்கு வெண்கலம் சொந்தமானது.
ஆண்களுக்கான நான்குக்கு 100 மீட்டர் குழு எதேச்சை பாணி போட்டியில் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்தது.
ஆஸ்திரேலியா இரண்டாவதும் இத்தாலி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
ஆண்களுக்கான 400 மீட்டர் எதேச்சை பாணி போட்டியில் ஜெர்மனியின் Lukas Maertens தனது முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றார்.
0.43 வினாடிகள் கழித்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாம் இடமும், தென்கொரியாவுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது.
வாட்போரில் பெண்களுக்கான eh-pay பிரிவில் ஹாங்காங்கின் விவியன் கோங் (Vivian Kong) தங்கம் வென்றார்.
கோங்குடன் பொருதிய பிரஞ்சு வீரர் வெள்ளியையும் ஹங்கேரி வீரர் வெண்கலத்தையும் வென்றனர்.