500 புதிய பாடசாலை பேருந்து சேவைகளை தொடங்க அனுமதி

பாடசாலை பேருந்து சேவை: நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ஜுலை 11, 2024 - 17:18
500 புதிய பாடசாலை பேருந்து சேவைகளை தொடங்க அனுமதி

2024 ஆம் ஆண்டில் 500 புதிய  சிசுசெரிய பாடசாலை பேருந்து சேவைகளை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 202 மில்லியன் நிதியை பயன்படுத்தும் யோசனைக்கு  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2005 ஆம் ஆண்டு சிசுசரிய பேருந்து சேவையானது ஆரம்பிக்கப்பட்டதுடன்,  இது பாடசாலை மாணவர்கள் எந்தவிதமான மன மற்றும் உடல் அசௌகரியம் இன்றி பாடசாலைகளை சென்றடையவும், பாடசாலை முடிந்து பத்திரமாக வீடு திரும்பவும் மானிய கட்டண முறையின் கீழ் நம்பகமான பஸ் சேவையை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது, ​​இத்திட்டத்தின் கீழ், இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் 1537 பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன. 

அத்துடன், நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இந்த வருடத்தில் 500 புதிய சிசுசரிய சேவைகளை ஆரம்பிப்பதற்கு பணத்தை ஒதுக்குவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!