அமைதிக்கான நோபல் பரிசு 2025: டிரம்ப்பைத் தாண்டி மரியா கொரினா மச்சாடோவுக்குக் கிடைத்த அங்கீகாரம்!
2025 அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளுக்கான அவரது போராட்டத்தைப் பாராட்டி, டிரம்ப் பரிந்துரைகளைத் தாண்டி அவருக்கு இந்த விருது கிடைத்தது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று (10) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025ஆம் ஆண்டுக்கான நோபல்அமைதிப் பரிசை வழங்க விருதுக் குழு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அத்தோடு, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் இஸ்ரோல் உள்ளிட்ட நாடுகளும் அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்க்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தன.