92 சதவீத சுகாதாரத் துவாய்களுக்கு வரி அறிவிடப்படுவது இல்லை

உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே அந்த வரித் தொகை அறவிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மார்ச் 12, 2024 - 15:04
92 சதவீத சுகாதாரத் துவாய்களுக்கு வரி அறிவிடப்படுவது இல்லை

Colombo, March 12 ( News21 ) - நாட்டிற்குத் தேவையான மொத்த சுகாதாரத் துவாய்களில் 92 வீதமானவை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும், அவற்றிற்கு வரி அறவிடப்படுவதில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தல்துவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் எஞ்சிய 8% பொருட்களை உற்பத்திப் பொருட்களாக ஒரு நிறுவனம் இலங்கைக்கு கொண்டுவருவதாகவும், அதற்கு 22.5% வரியே அறவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே அந்த வரித் தொகை அறவிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!