தலதா மாளிகை சென்று அநுரகுமார திஸாநாயக்க ஆசிர்வாதம் பெற்றார்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று திங்கட்கிழமை பிற்பகல் (23) சென்று ஆசி பெற்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று திங்கட்கிழமை பிற்பகல் (23) சென்று ஆசி பெற்றார்.
தலதா மாளிகையை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.
பின்னர், தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.
இதனையடுத்து, தலதா மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட பார்வையாளர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார்.