இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 09 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றிய இராணுவ அதிகாரி ஆவார்.
மாத்தளையில் பிறந்த இவர், மாத்தளை விஜயா வித்தியாலயம் மற்றும் கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவர் ஆவார்.
அத்துடன், 1989 ஆம் ஆண்டு இராணுவத்தில் ஒரு கெடட் அதிகாரியாக இணைந்துகொண்டார்.