நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை
நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.

நத்தாரை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பொலிஸ் மற்றும் முப்படையினர் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்படும் என, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் 6,500 இற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள 2000க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் நத்தார் தினத்தன்று ஆராதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், தேவைப்பட்டால் முப்படையினரின் உதவி பெறப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இலக்கு வைத்து விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையுடன், சமய ஸ்தலங்கள், விற்பனை நிலைய பகுதிகளுக்கு அருகில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.