பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் தெரிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (07) காலை இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது
மேலும் இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ , ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஜயந்த கொடகொட உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து தம்மிக பெரேரா விலகுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.