மீண்டும் எம்.பியாக முஜிபுர் ரஹ்மான் சத்தியப்பிரமாணம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் நேற்று (10) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கச் சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமான இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.