பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு பிணை
சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு, இன்று (08) பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து சரீர பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, பிணை எடுப்பவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அத்தடன், சந்தேக நபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபையின் பெயரில் தேசிய சேமிப்பு வங்கியில் பராமரிக்கப்பட்டு வந்த ஆறு நிலையான வங்கிக் கணக்குகளை திரும்பப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.73 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்பட்டுத்தியாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.