தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழப்பு
32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த கற்குழியில் நேற்று பிற்பகல் தாயும் இரண்டு பிள்ளைகளும் நீராட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையதுத்து, தாயின் சடலம் நேற்றிரவு (21) மீட்கப்பட்டதுடன், பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.