அதிக விக்கெட்... பும்ராவை முந்திய ஷமி.. ஆனால் நம்பர் 1 இடம் நழுவிப் போச்சு!

2023 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் பும்ராவை முந்தி இருக்கிறார் முகமது ஷமி. இதில் சிறப்பான விஷயம், பும்ரா 8 போட்டிகளில் 15 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள நிலையில், ஷமி 4 போட்டிகளில் மட்டுமே ஆடி அவரை முந்தி இருக்கிறார்.

நவம்பர் 6, 2023 - 17:48
அதிக விக்கெட்... பும்ராவை முந்திய ஷமி.. ஆனால் நம்பர் 1 இடம் நழுவிப் போச்சு!

2023 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் பும்ராவை முந்தி இருக்கிறார் முகமது ஷமி. இதில் சிறப்பான விஷயம், பும்ரா 8 போட்டிகளில் 15 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள நிலையில், ஷமி 4 போட்டிகளில் மட்டுமே ஆடி அவரை முந்தி இருக்கிறார்.

அதே சமயம், பும்ரா மற்றும் ஷமி இருவருமே லீக் சுற்றின் முடிவில் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பது கடினம் தான். அரை இறுதி, இறுதிப் போட்டியில் ஆடி அதிலும் அதிக விக்கெட் வீழ்த்தினால் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் முகமது ஷமி உலகக்கோப்பை தொடரில் முதல் நான்கு போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் அடுத்த நான்கு போட்டிகளில் மட்டும் ஆடி முறையே 5, 4, 5 மற்றும் 2 விக்கெட்களை வீழ்த்தி மொத்தம் 16 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஷமி நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா கட்டுக் கோப்பாக பந்து வீசினாலும், விக்கெட் வீழ்த்தவில்லை. 

அதனால் அவர் 8 போட்டிகளின் முடிவில் 15 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இதே அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா இருக்கிறார். 

அவர் 7 போட்டிகளில் 19 விக்கெட்களை அள்ளி இருக்கிறார். லீக் சுற்றிலேயே அவர் இன்னும் இரண்டு போட்டிகளில் ஆடுவார் என்பதால் அவர் இன்னும் அதிக விக்கெட்கள் வீழ்த்த வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது இடத்தில் இலங்கையின் மதுசங்கா இருக்கிறார். அவர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தியதால் அதிரடியாக இந்தப் பட்டியலில் முன்னேறி இருந்தார். அவருக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் லீக் சுற்றில் இருப்பதால் ஜம்பாவை விட அதிக விக்கெட் வீழ்த்த வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் 8 போட்டிகளில் 17 விக்கெட்கள் வீழ்த்தி இடம் பெற்றுள்ளார். நான்காவது இடத்தில் ஷமி இருக்கும் நிலையில், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 8 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி இடம் பெற்றுள்ளார். பும்ரா 15 விக்கெட்களுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஜம்பா (19 விக்கெட்) மற்றும் மதுசங்கா (18 விக்கெட்) இருவருமே இன்னும் இரண்டு லீக் போட்டிகளில் ஆட வேண்டும். அதனால், இன்னும் ஒரு லீக் போட்டியில் மட்டுமே ஆட வேண்டிய பும்ரா, ஷமி அவர்களை லீக் சுற்றின் முடிவிலேயே முந்துவது கடினம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!