சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் பலி
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை சீன அரச ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் இறந்துள்ளதுடன், 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை சீன அரச ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் முன்னதாக, அப்பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக கூறியது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகவும் இருந்ததாகவும்10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் சீனாவின் லான்ஜோவிலிருந்து மேற்கு-தென்மேற்காக 102 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன்படி நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகளில் ஈடுபட உடனடியாக அவசர மீட்பு குழுவினர் விரைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.