மிரிஹான போராட்டம்; ஊடகவியலாளர் உள்ளிட்ட மூவர் பலத்த காயம்
காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என...

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக நடைபெற்றுவரும் போராட்டத்தின்போது பொலிஸாரின் தாக்குதலால் இதுவரையில் மூவர் காயமடைந்துள்ளனர்
அவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.