பால் தேநீர் விலை குறைப்பு - வெளியான தகவல்
விலை குறைக்கப்பட்ட பால் மா சந்தைக்கு வந்த பின்னர், பால் தேநீரின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், விலை குறைக்கப்பட்ட பால் மா சந்தைக்கு வந்த பின்னர், பால் தேநீரின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது 100 ரூபாயாக உள்ள பால் தேநீரின் விலை 90 ரூபாயாக குறையும் என அவர் கூறியுள்ளதார்.
இதேவேளை, புறக்கோட்டையை அண்மித்த பகுதியில் பால்மா அல்லாமல் டின்பால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் தேநீர் தற்போது 60 முதல் 80 ரூபாய் வரை உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.