ஒபாமா - மிச்செல் விவாகரத்து? பதவியேற்பு விழா புறக்கணிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகின்றது.

ஜனவரி 17, 2025 - 16:19
ஒபாமா - மிச்செல் விவாகரத்து? பதவியேற்பு விழா புறக்கணிப்பு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோர் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்காரணமாகவே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் மிச்செல் ஒபாமா பங்கேற்க மாட்டார் எனவும் கூறப்படுகின்றது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரிம் இறுதி அஞ்சலி கூட்டத்தில் பராக் ஒபாமா மட்டுமே பங்கேற்ற நிலையில்,   ஒபாமாவுக்கும், மிச்செலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரியப் போகிறார்கள் என்று சமூக ஊடகங்கள் பலவற்றிலும் பேசப்பட்டது. 

இந்தநிலையில் ட்ரம்ப் பதவியேற்பு விழாவிலும் மிச்செல் பங்கேற்க மாட்டார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியானதால் இந்த ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன.

இந்த நிலையில், மிச்செல் ஒபாமா தரப்பிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில், “அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பங்கேற்கிறார். ஆனால் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா பங்கேற்கவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாக்களில் முன்னாள் ஜனாதிபதிகள் அவர்களின் மனைவியுடன் பங்கேற்பது கலாசார பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 

பராக் ஒபாமாவும், மிச்செல் ஒபாமாவும் 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதுடன், அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!