ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
சந்தேக நபர், 57 வயது வான்ஸ் லுதர் பெல்தர் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரையும் அவரின் கணவரையும் கொலை செய்த நபரை பொலிஸார் தேடிவருகிறனர்.
சந்தேக நபர், 57 வயது வான்ஸ் லுதர் பெல்தர் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மெலிசா, மார்க் ஹொர்ட்மன் எனும் தம்பதியை அவர்களது வீட்டில் சந்தேக நபர் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று நம்புவதாக பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.
ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜான் ஹொஃப்மனும் அருகிலிருந்த வட்டாரத்தில் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.