பம்பலப்பிட்டி பாதசாரி கடவை விபத்தில் ஒருவர் பலி
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

பம்பலப்பிட்டி
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், குறித்த பாதசாரி மீது மோதியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலியில் வசிக்கும் 64 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.