யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் நாளை (28) யாழ்ப்பாணத்திற்கு அவர் செல்லவுள்ளார்.
மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் மைத்திரிபால சிறிசேன ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயத்தின்போது, சர்வமத வழிபாடுகளிலும் கலந்துகொள்ளும் மைத்திரிபால சிறிசேன, மததலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் சமூகமட்ட நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
சமகாலத்தில் யாழ். மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும், நீண்ட காலமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பிலும் பல்வேறுபட்ட தரப்பினரை மைத்திரிபால சிறிசேன இவ்விஜயத்தின்போது சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.