பெண்ணின் மூளையில் உயிருடன் இருந்த புழு! வைத்தியர்கள் அதிர்ச்சி!
மனித மூளைக்குள் உயிருள்ள புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை மருத்து உலகில் இதுவே முதன்முறை என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவரின் மூளையில் இருந்து 3 அங்குல நீளமுள்ள புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
மனித மூளைக்குள் உயிருள்ள புழு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை மருத்து உலகில் இதுவே முதன்முறை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண், தான் வாழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில், கீரைகளை சேகரித்தபோது இந்த புழு தொற்றியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வயிற்று வலி, இருமல், இரவு வியர்த்தல் மற்றும் வயிற்றுப்போக்கு என்பது அவருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மறதி மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், 2021ஆம் ஆண்டு ஜனவரி பிற்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பின்னர் ஸ்கேன் செய்ததில், மூளையின் வலது முன் மடலில் ஒரு வித்தியாசமான காயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே 2022 ஜூன் மாதத்திலேயே குறித்த பெண்ணின் நோய்க்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண் நன்றாக குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.