இன்று(01) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று(01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 135 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை 4,115 ரூபாயாகும்.
அத்துடன், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 55 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 1,652 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபாயாகும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு விலை
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் குறைத்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 625 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விலை 4,111 ரூபாயாகும்.
அத்துடன், 5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 248 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,652 ரூபாயாகும்.