லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு - புதிய விலை விவரம் இதோ!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
லிட்ரோ எரிவாயு புதிய விலை விவரம்
அதன்படி, 2,982 ரூபாயாக இருந்த 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 3,127 ரூபாயாகும்.
மேலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 58 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1,256 ரூபாயாகும்.
லாஃப்ஸ் எரிவாயு புதிய விலை விவரம்
இதேவேளை, 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3985 ரூபாயாகும்.
லாஃப்ஸ் நிறுவனம் 5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 60 ரூபாயால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 1595 ரூபாயாகும்.
அத்துடன், லாஃப்ஸ் நிறுவனம் 2 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 24 ரூபாயினால் அதிகரித்துள்ளது. அதன் புதிய விலை 638 ரூபாயாகும்.