ஊடகவியலாளருக்கு உதவிக்கரம் நீட்டுவோம்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் அருள், கடுமையாக நோய்வாய்பட்டிருப்பதால் அவரால் எந்தவொரு தொழிலும் செய்யமுடியாமல் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் அருள், கடுமையாக நோய்வாய்பட்டிருப்பதால் அவரால் எந்தவொரு தொழிலும் செய்யமுடியாமல் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். ஒருவர் தரம் 9 இலும் மற்றையவர் தரம் 7லும் கல்வி கற்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் அவர் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். மருத்துவ செலவுக்கே நிதியின்றி அவதிப்படுகின்றார். பிள்ளைகளின் கல்வி தேவையை பூர்த்தி செய்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பிரதான ஊடகங்களில் பணியாற்றியவர்தான் அருள் ஜேசு. ஊடகத்துறையில் பணியாற்றும்போது சமூக நீதிக்காகவும் குரல் கொடுத்தவர். மலையக சமூகம் எழுச்சிபெற வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தவர்.
ஆனால் நோய் அவரை விட்டுவைக்கவில்லை. இன்று கட்டிலிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை. அவரின் மருத்துவ செலவு, பிள்ளைகளின் எதிர்காலம் உள்ளிட்டவற்றுக்கு முடிந்தவர்கள் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உதவ நினைப்பவர்கள் அவருடைய +94 77 779 5709 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு நேரடியாக உதவி செய்யலாம்.