Laughfs எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது... முழுமையான விவரம்
Laughfs எரிவாயு விலை: Laughfs எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைத் திருத்தத் தீர்மானித்துள்ளது.

Laughfs எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைத் திருத்தத் தீர்மானித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 05 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 59 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;
12.5 கிலோகிராம் சிலிண்டர் - ரூ. 3,835
5 கிலோகிராம் சிலிண்டர் - ரூ. 1,535
திருத்தப்பட்ட விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
முன்னதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 145 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 2982 ரூபாயாக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் 3127 புதிய விலை ரூபாய் ஆகும்.
அதேபோல், 1198 ரூபாயாக நிலவிய 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 58 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1256 ரூபாயாகும்.
561 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 587 ரூபாயாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.