இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றம்
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து: இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை முன்னரே கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (செப்டம்பர் 6) முதல் நடைபெற உள்ளது. இந்த கடைசி டெஸ்ட்டில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல்:
டான் லாரன்ஸ்
பென் டக்கெட்
ஒல்லி போப் (கேப்டன்)
ஜோ ரூட்
ஹாரி புரூக்
ஸ்மித் (விக்கெட் கீப்பர்)
கிறிஸ் வோக்ஸ்
கஸ் அட்கின்சன்
ஒல்லி ஸ்டோன்
ஜோஷ் ஹல்
ஷோயிப் பஷீர்
இந்த அணியில் கொஞ்சம் புதிய வீரர்களையும், அனுபவம் வாய்ந்த வீரர்களையும் இணைத்து, இலங்கைக்கு எதிராக வெற்றி பெறும் எண்ணத்தில் இங்கிலாந்து அணியைக் கட்டமைத்துள்ளது.
தொடரின் கடைசி போட்டி என்பதால், இரு அணிகளும் வெற்றி பெறுவதற்கான கடைசி முயற்சியில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.