மீண்டும் அதிரடியாக எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
அத்துடன், சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் 75 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் 75 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 338 ரூபாயாகும். ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 367 ரூபாயாகும்.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 289 ரூபாயாகும். சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 327 ரூபாயாகும்.