9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு இன்றிரவு 8 மணிவரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள 9 மாவட்டங்களுக்கு இன்றிரவு 8 மணிவரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.