தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2024 : 12 ராசிக்கான சுருக்கமான பலன்கள்

குரோதி தமிழ் வருடம் ஏப்ரல் 14ம் திகதி (சித்திரை 1) பிறக்கிறது. இந்த குரோதி வருடத்தில் 12 ராசியினருக்கும் சுருக்கமான பலன்கள்.

Mar 28, 2024 - 12:51
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2024 : 12 ராசிக்கான சுருக்கமான பலன்கள்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2024

குரோதி தமிழ் வருடம் ஏப்ரல் 14ம் திகதி (சித்திரை 1) பிறக்கிறது. இந்த குரோதி வருடத்தில் 12 ராசியினருக்கும் சுருக்கமான பலன்கள்.

குரோதி ஆண்டு கிரக நிலை: மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

இந்தாண்டு ஏப்ரல் 14, சித்திரை 1ம் திகதி, ஞாயிற்றுக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது. 12 ராசிக்கான ஒருவரி பலன்களை பார்ப்போம்.

மேஷ ராசி: ராசியில் குருவும், தொடர்ந்து தன ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு பொக்கிஷமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷப ராசி: குரு உங்கள் ராசிக்கு மாற உள்ளார். உங்கள் ராசி நாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் இந்தாண்டில் ஆனந்த கண்ணீர் விடுவீர்கள். சில சுப காரியங்கள் நடந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுன ராசி: லாப ஸ்தானமான 11ல் குரு சஞ்சாரம் செய்ய உள்ளார். மேலும், ராசி நாதன் புதன், சுக்கிரனுடன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணை சீதனமாக அமைவார்.

கடகம் ராசி: கடக ராசிக்கு அஷ்டம சனியும், 10ல் குரு வருவதால் சற்று கவனமாக நடந்து கொள்ள வேண்டிய ஆண்டாக குரோதி வருடம் அமையும். திரும்பும் திசையெல்லாம் கலகம் ஏற்படும்.

சிம்மம் ராசி: 8ல் ராகு, 9ல் குரு அமைவதால் கலவையான பலன்களே பெறுவீர்கள். நீங்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். குடும்பத்திலும், பணியிடத்திலும் தேவையற்ற பிரச்னை, வன்மத்தை சந்திக்க நேரிடும்.

கன்னி ராசி: 1ல் கேது, 6ல் சனி, 7ல் ராகு, 8ல் குரு என கிரகங்கள் அமைகின்றன. இதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் அவ்வப்போது நிம்மதியை கெடுக்கும். குருவின் மாற்றத்தால் ஓரளவு நன்மைகளையும் பெற்றிடுவீர்கள்.

துலாம் ராசி: 7ல் இருக்கும் குரு 8ம் இடத்திற்கு செல்ல உள்ளார். உங்கள் ராசிக்கு குரு மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்பானது சாதக பலன்கள் கிடைக்கும். சிறப்பான விஷயம் என்னவெனில் திருமண முயற்சிகள் நிறைவேறும், சுப காரியம் நடக்கும்.

விருச்சிக ராசி: தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கிய பிரச்னையால், உங்களின் உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். இருப்பினும் அதிலிருந்து விரைவில் மீள குருவின் நல்லருள் கிடைக்கும்.

தனுசு ராசி: குரு 5லும் பின்னர் 6ம் இடத்திற்கும் மாறுகிறார். இதனால் சில விஷயங்கள் சாதக பலனை தரக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு குழந்தை பேறு கிடைத்து குடும்பமே மகிழ்ச்சி அடையும்.

மகர ராசி: மகர ராசிக்கு இந்த ஆண்டில், உங்கள் ராசி மீது குருவின் 9ம் பார்வை விழுகிறது. இதன் காரணமாக சுப பலன்கள் மிகுதியாக கிடைக்கும். எதிரிகள் மூலமாக கூட உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

கும்ப ராசி: ராசியிலேயே ஜென்ம சனியும், 2ல் ராகு அமர்ந்திருக்கும் நிலையில் உங்களுக்கு மன உளைச்சல் தரக்கூடியதாக இருக்கும். ஜென்ம சனி நடப்பதால் எதிலும், எவரிடத்திலும் கவனமாகவும், இனிமையாக நடந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டில் எப்போது விடிவு காலம் பிறக்கும் என ஏங்குவீர்கள்.

மீன ராசி: விரய சனி நடக்கும் நிலையில், ராசி நாதன் குரு தன ஸ்தானம் தொடர்ந்து 3ம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். ராசியிலேயே ராகு சஞ்சாரமும் நடப்பதால் உங்களின் செலவுகள் கூடும். வீண் விரயங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.