அணி தான் முக்கியம்! அப்பாவான கையோடு களம் இறங்கும் ராகுல்
ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு திங்களன்று பெண் குழந்தைப் பிறந்தது.

ஐபிஎல் 2025 சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தனக்கு குழந்தை பிறந்த காரணத்தால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் விளையாடவில்லை.
ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு திங்களன்று பெண் குழந்தைப் பிறந்தது. கடந்த நவம்பரில் நடந்த மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ராகுல், SRH அணிக்கு எதிரான வரவிருக்கும் போட்டியில் இடம்பெறுவார்.
ராகுல் இந்த மாத தொடக்கத்தில் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவுக்காக இரண்டு போட்டிகளை வென்றார். இருப்பினும், கடந்த ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம் பெறத் தவறியதால் அவர் T20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
எனவே அடுத்த ஆண்டு ICC T20 போட்டியில் இந்தியா கவனம் செலுத்தி வருவதால், T20I அணியில் மீண்டும் தனது இடத்தைப் பெற விரும்புவதாக முன்னதாகவே கூறியிருந்தார்.
ஓய்வு எடுத்திருந்தாலும், இந்தியாவின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயரின் கண்காணிப்பில் ராகுல் மும்பையில் பயிற்சி மேற்கொண்டார்.
இந்த நிலையில், மார்ச் 30 அன்று SRH அணிக்கு எதிரான போட்டிக்காக விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.