பாடசாலையில் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா... இலக்கை நோக்கி ஈழத்து குயில்

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் நேற்று கௌரவமளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.

பெப்ரவரி 6, 2024 - 19:56
பெப்ரவரி 6, 2024 - 20:01
பாடசாலையில் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா... இலக்கை நோக்கி ஈழத்து குயில்

ஈழத்து குயில் கில்மிஷாவுக்கு, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் நேற்று கௌரவமளிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் நேற்று பாடசாலைகள் ஆரம்பமான நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. 

இதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கில்மிஷா தனது மருத்துவராக வேண்டும் என்ற கனவினை அடைய கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமைக்கு பலரும் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!