கரு பரணவிதான பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறார்
தலதா அத்துகோரள பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

தலதா அத்துகோரள பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
புதன்கிழமை (ஆகஸ்ட் 21), ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி இன்று தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, வெற்றிடத்தை நிரப்புவதற்காக, SJB பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான, பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு அடுத்த வரிசையில் உள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதான SJBயின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.