ஆடையின்றி ஆஸ்கர் மேடைக்கு வந்த ஜான் சீனா.... அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலக நாடுகளில் உள்ள ரசிகர்கள் ஜான் சீனாவின் செயலையும் ஆஸ்கர் குழுவையும் கழுவி ஊற்றுகின்றனர்.

ஆஸ்கர் விருது தான் சினிமா உலகில் உச்சபட்சமான விருது விழாவாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆஸ்கருக்கு உலகில் உள்ள 175 நாடுகளும் சிறந்த படங்களை அனுப்பி வைக்கின்றன. அதில், இந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த The Zone Of Interest திரைப்படம் ஆஸ்கர் வென்றது.
டுவைன் தி ராக் ஜான்சன் போல WWEல் நடிச்சது போதும் ஹாலிவுட்டில் நடிக்கலாம் என களமிறங்கிய ஜான் சினா 96வது ஆஸ்கர் விருது விழா மேடையில் நிர்வாணமாக வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலக நாடுகளில் உள்ள ரசிகர்கள் ஜான் சீனாவின் செயலையும் ஆஸ்கர் குழுவையும் கழுவி ஊற்றுகின்றனர்.
புவர் திங்ஸ் படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதுகளை வழங்குவதற்காகவே நடிகர் ஜான் சினா விருது அறிவிப்பை வைத்து தனது முக்கிய உறுப்பை மட்டும் மறைத்துக் கொண்டு வேறு எந்தவொரு ஆடையும் அணியாமல் மேடைக்கு வந்து அங்கேயே அதிரடியாக உடைகளை அணிந்துக் கொண்டு அந்த விருதினை அறிவித்தார்.
இதனையடுத்து, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆஸ்கர் விருது விழா குழுவை திட்டி வருகின்றனர். அதே நேரத்தில் ஹாலிவுட் படங்களில் தேவையில்லாமல் நிர்வாண காட்சிகள் கமர்ஷியலுக்காக இடம்பெறுவது போல ஆஸ்கர் விருது விழாவையும் களங்கப்படுத்தி விட்டனர் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.