யாழ். இளைஞன் கனடாவில் தற்கொலை
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியை சொந்த இடமாக கொண்ட 31 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த யாழ். இளைஞன் ஒருவர் தொடர்மாடி வீடொன்றில் 16 வது மாடியில் இருந்து குதித்து நேற்று தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியை சொந்த இடமாக கொண்ட 31 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கனடாவில் மேம்பில் பிரதேசத்தில் பெண்ணுடன் தொடர்மாடி வீட்டில் வசித்து வந்த இவர், சண்டை காரணமாக பெண்ணையும் மாடியில் இருந்து தள்ளி விட்டு, அவரும் மாடியில் இருந்து குதித்துள்ளார்.
தள்ளிவிடப்பட்ட பெண் மேல் மாடியில் பல்கனியில் உள்ள வேலியில் சிக்கிக்கொண்டுள்ளதுடன் இளைஞன் மாத்திரம் கீழே விழுந்துள்ளார்.
இளைஞனின் சடலம் கனேடிய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.