ஈஸ்டர் தாக்குதல் நடந்து 5 வருடங்கள் ஆகிறது
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறன.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறன.
இது தொடர்பான நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் நேற்று (20) பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையுடன் ஆரம்பமானது.
அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெற்றது.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019 அன்று, நாட்டின் 08 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்ததுடன், 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கடுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தை மையப்படுத்தி தொடர் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தேவாலயங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.