மருத்துவமனைக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தேடுதல் வேட்டை 

நேற்று மருத்துவமனையின் வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் நுழைந்துள்ளன.

நவம்பர் 16, 2023 - 15:30
மருத்துவமனைக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தேடுதல் வேட்டை 

இஸ்ரேல் ராணுவம் ஏறக்குறைய வடக்கு காசாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தற்போது ஹமாஸ் அமைப்பினர் எங்கு மறைந்துள்ளனர் எனத் தேடிவருகின்றனர். 

தொடக்கத்தில் இருந்தே அல் ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், மருத்துவ நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மருத்துவமனையின் வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் நுழைந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல் இஸ்ரேல் ராணுவத்தினர் மருத்துவமனை கட்டடத்திற்குள் சென்றுள்ளனர். 

அவசரப்பிரிவு, ஆபரேசன் நடைபெறும் இடங்கள், திவிர சிசிக்சை பிரிவுகள் என எல்லா இடங்களில் சென்று ஹமாஸ் அமைப்பினர் செயல்பாடு உள்ளதா? என ஆராய்ந்துள்ளனர். இந்த தகவலை அல் ஷிபா மருத்துவமனையின் இயக்குனர் முகமது தெரிவித்துள்ளார்.

ஹமாஸை முறியடிக்கும் வகையில் தெற்கு காசாவில் தங்களது பிரசாரத்தை மேற்கொள்ள இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஷிபா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நிலையில், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உயிர் பிழைப்பதற்காக போராடி வருகிறார்கள்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!