இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

நேற்று மாலை அந்த கருவி எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் ஒலித்தது. இதனால், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஜுலை 23, 2023 - 11:43
இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு (வயது 72). கடந்த வாரம் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. 
இதனை தொடர்ந்து, அவர் ஷீபா மருத்துவ மையத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை சேர்க்கப்பட்டார்.

அதன்பின்னர் சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் இயல்பாக உள்ளன. 

அவர் நலமுடன் உள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்தது. அவருக்கு இதய கண்காணிப்பு கருவியும் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மாலை அந்த கருவி எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் ஒலித்தது. இதனால், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்த சூழலில் அவர், நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதன்பின் அவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சை நடந்தது என தகவல் தெரிவிக்கின்றது.

இதற்கு முன் பிரதமர் நேதன்யாகு வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நன்றாக உணர்கிறேன் என்றும் மருத்துவரின் அறிவுரையை கேட்டு செயல்படுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!