காசா வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் உயிரிழந்தாக தகவல்!
கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் நீடித்து வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த 12 நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போர் நீடித்து வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், காசாவில் உள்ள அல் அரபு வைத்தியசாலை மீது நடத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடைவிடாத தாக்குதல்களில் இருந்து மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். தாக்குதலில் நடத்தப்பட்ட மருத்துவமனை குழந்தைகள் நிறைந்த வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு கனடா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ மதபோதகர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், வைத்தியசாலை மீதான தாக்குதல் போர்குற்றம், இனப்படுகொலை, இனப்படுகொலையை சர்வதேச நாடுகள், அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.