முடிந்தவரை மோதி பார்த்த பெங்களூர் அணி; 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 30வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்  மோதின.

Apr 16, 2024 - 07:20
முடிந்தவரை மோதி பார்த்த பெங்களூர் அணி; 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 30வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்  மோதின.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, வீடியோ கேம் விளையாடுவதை போன்று பெங்களூர் அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டி அசுர வேகத்தில் ரன்னும் குவித்தது.

டர்வீஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ரன்களும், கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்களும், மார்கரம் 17 பந்துகளில் 32 ரன்களும், அப்துல் சமத் 10 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது.

இதன்பின் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி 20 பந்துகளில் 42 ரன்களும், டூபிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.

அடுத்ததாக களத்திற்கு வந்த வில் ஜேக்ஸ் (7), ராஜத் படித்தர் (9), சவுஹான் (0) உள்ளிட்ட வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், நீண்ட நேரம் தனி ஆளாக போராடிய தினேஷ் கார்த்திக் மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 35 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்த போது போட்டியின் 19வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். 

லம்ரோர் 19 ரன்களும், அனுஜ் ராவத் 25 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், இலக்கு மிக பெரியது என்பதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்த பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பந்துவீச்சில் ஹைதராபாத் அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்கண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.