இன்றுடன்  பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு காலம் நிறைவு

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட 3 மாத கால பதவி நீடிப்பானது இன்றுடன்(09) நிறைவுக்கு வரவுள்ளது.

ஒக்டோபர் 9, 2023 - 11:37
ஒக்டோபர் 9, 2023 - 11:45
இன்றுடன்  பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு காலம் நிறைவு

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட 3 மாத கால பதவி நீடிப்பானது இன்றுடன்(09) நிறைவுக்கு வரவுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி முதல் இந்த சேவை நீடிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியிருந்தார்.

இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக 2020 நவம்பரில் நியமிக்கப்பட்ட சி. டி. விக்கிரமரத்ன, தனது பதவியில் இருந்து மார்ச் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு 3மாத கால பதவி நீடிப்பை வழங்கியிருந்தார்.

முதல் சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09ஆம் திகதியின் பின் முதல் மூன்று மாத காலத்திற்கான இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பொலிஸ் மா அதிபரின் சேவை முடிவடைந்த காரணத்தினால் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மற்றுமொரு அதிகாரி நியமிக்கப்படுவாரா, அல்லது சி.டி. விக்கிரமரத்னவுக்கே சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்படுவதா அல்லது வழங்கப்படாவிடின் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு சி.டி.விக்ரமரத்ன அதே பதவியில் தொடர்ந்தும் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டால் பொலிஸ் திணைக்களத்திற்குள் பிளவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நெருங்கிய தரப்பினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!