யாழ்ப்பாணம் - திருச்சிக்கு இடையில் இண்டிகோ விமான சேவை

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை மார்ச் 30 முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

மார்ச் 8, 2025 - 21:57
யாழ்ப்பாணம் - திருச்சிக்கு இடையில் இண்டிகோ விமான சேவை

இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ், யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடையே தினசரி நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை மார்ச் 30 முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கும் திருச்சி விமான நிலையத்துக்கும் இடையே விமான சேவைக்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

வணிக மற்றும் மதப் பயணங்களுக்கு இந்த விமான நிறுவனம் பிரபலமானது என்றும், தினசரி நேரடி விமான சேவைகள் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!