டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: சுப்மன் கில் vs சஞ்சு சாம்சன் போட்டி உச்சத்தில்
இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து செயல்படுவார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய போட்டிகளில் அவரது பேட்டிங் சிறிது தடுமாறினாலும், அவரது தலைமையில் அணி தொடர்கிறது.
2026 ICC T20 உலகக் கோப்பைக்கு முன்னோடியாக நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி, வரும் டிசம்பர் 20, 2025 (சனிக்கிழமை) அன்று மும்பை வான்கடே மைதானத்திற்கு அருகிலுள்ள பிசிசிஐ தலைமையகத்தில் அறிவிக்கப்பட உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அன்று கூடி, வீரர்களை தேர்வு செய்து உறுதிப்படுத்தும்.
இந்திய அணியின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து செயல்படுவார் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய போட்டிகளில் அவரது பேட்டிங் சிறிது தடுமாறினாலும், அவரது தலைமையில் அணி தொடர்கிறது.
ஆனால் முக்கியமான கேள்வி – ஓபனர் இடத்தில் யார்? துணைக் கேப்டன் சுப்மன் கில் தற்போது பார்ம் அவுட்டில் இருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பாதியிலேயே காயத்தை சுட்டிக்காட்டி வெளியேறிய அவர், கால் விரல் காயத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த போட்டிகளில் சாம்சனின் ஆக்ரோஷமான ஓபனிங் ஆட்டம் பாராட்டப்பட்டிருப்பதும், இந்த தேர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கிறது.
உலகக் கோப்பை மேலும் அருகில் இருப்பதால், இந்த நியூசிலாந்து தொடர் வீரர்களுக்கு இறுதி சோதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவிருக்கும் 10-வது T20 உலகக் கோப்பையில், இந்தியா ‘குரூப் A’-வில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளுடன் போட்டியிடும். இந்தியா தனது முதல் போட்டியில் பிப்ரவரி 7-ஆம் தேதி மும்பையில் அமெரிக்காவை சந்திக்கிறது.
கடந்த 24 மாதங்களில் 46 டி20 போட்டிகளில் வெறும் 5-இல் மட்டுமே தோற்றுள்ள இந்திய அணி, 2024 உலகக் கோப்பையை வென்ற நம்பிக்கையுடன் 2026 போட்டிக்கும் பெரும் சாத்தியக்குறியாக விளங்குகிறது.
இந்த அணி அறிவிப்பு மற்றும் செய்தியாளர் சந்திப்பு, டிசம்பர் 20 மதியம் 1:30 மணியளவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலியிலும் நேரலையில் ஒளிபரப்பாகும்.
தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.